புதுடெல்லி: நாட்டில் நோயற்ற தோட்டக்கலை பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்க ஆசிய வளர்ச்சி வங்கியுடன் ரூ.823 கோடி கடன் ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திட்டுள்ளது.
பருவநிலை மாற்றத்தை எதிர்க்கும் தரமான, அதிக மகசூல் தரும் பயிர்களை பயிரிடுவதற்கு இந்த ஒப்பந்தம் துணைபுரியும். இந்த ஒப்பந்தத்தில் ஏடிபியின் இந்திய பிரிவு அதிகாரி காய் வெய் யா மற்றும் நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் இணைச் செயலாளர் ஜூஹி முகர்ஜி ஆகியோர் கையெழுத்திட்டனர். தாவர நோய்களைக் கண்டறிந்து கட்டுப்படுத்தும் நவீன ஆய்வகங்கள் இந்த நிதியின் கீழ் அமைக்கப்படும்.