மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளது. பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கிடையில் படக்குழுவினருக்கு பெரும் பிரச்சனை எழுந்துள்ளது.
ஹாலிவுட் படமான ‘பிரேக்டவுன்’ படத்தின் ரீமேக்தான் ‘விடாமுயற்சி’. இதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும், படத்தின் டீசர் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. டீசரில் வரும் காட்சிகள் மற்றும் ‘பிரேக்டவுன்’ படத்தின் காட்சிகள் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இணையத்தில் வரும் கருத்துக்களை முன்வைத்து ‘பிரேக்டவுன்’ படக்குழு லைகா பிலிம்ஸ் நிறுவனத்துக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளது.
அதில், இது எங்கள் படத்தின் ரீமேக் என்று தெரியும், அதற்கு 15 மில்லியன் டாலர்கள் கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். இதனால் லைகா பெரும் அதிர்ச்சியில் இருக்கிறார். ஏனெனில் 15 மில்லியன் டாலர்கள் என்றால் 100 கோடிக்கு மேல்.
ஏற்கனவே படப்பிடிப்பு தாமதம், அதிக பட்ஜெட் என பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது ‘விடாமுயற்சி’ படக்குழு. தற்போது வந்துள்ள இந்த மின்னஞ்சலால் மீண்டும் சிக்கலில் சிக்கியுள்ளனர்.