சென்னை: அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி, தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் உள்ள அம்பேத்கர் உருவப்படத்துக்கு மாநில செயலாளர் முத்தரசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மதச்சார்பின்மை, சோசலிசம் என்ற வார்த்தைகளை அகற்ற ஆர்.எஸ்.எஸ்., அரசியல் பிரிவான, பா.ஜ., மற்றும் சங்பரிவார் அமைப்புகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. மதச்சார்பின்மை என்று சொல்லும் போது, அம்பேத்கரின் நினைவு தினம் கொண்டாடப்படும் அதே நேரத்தில் பாபர் மசூதியும் இடிக்கப்பட்டது.
பாபர் மசூதி இடிக்கப்படவில்லை. இந்தியாவின் மதச்சார்பற்ற கொள்கை தகர்க்கப்பட்டுள்ளது. அம்பேத்கரின் நினைவைப் போற்றும் போது, அரசியலமைப்புச் சட்டம் மற்றும் அது வழங்கிய கொள்கைகள் மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அனைவரும் உறுதிமொழி எடுக்க வேண்டும்.