பொன்னேரி: லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், கணக்கில் வராத பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் நடந்த சோதனையில் ரூ. 79,000 சிக்கியது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப் பதிவு செய்ய லஞ்சம் பெறப்படுவதாக திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மதியம் 3.30 மணியளவில் திருவள்ளூர் மாவட்ட புலனாய்வு அதிகாரி தலைமையில் திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளர்கள் தமிழரசி, மாலா உள்ளிட்ட 5 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இரவு 8 மணி வரை நடந்த சோதனையில், லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார், கணக்கில் வராத ரூ. 79,100-யை பறிமுதல் செய்தனர்.