சென்னை: டி2 மீடியா பேனரில் எப்.பிரசாந்தி பிரான்சிஸ் தயாரித்து, பாஸர் ஜே.எல்வின் எழுதி இயக்கும் படம் ‘அம்பி’ மூலம் ரோபோ ஷங்கர் ஹீரோவாக அறிமுகமாகிறார். ரோபோ சங்கருக்கு ஜோடியாக அஸ்வினி சந்திரசேகர் கதாநாயகியாக நடிக்கிறார்.
ரமேஷ் கண்ணா, கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி மோகன் வைத்யா, கோவை பாபு, நமோ நாராயணா, மீசை ராஜேந்திரன் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு வெற்றிவேல் முருகன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கன்னடத்தில் அகோர, நெகிழா தர்மா, மகளே உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்த ஏ.பி.முரளிதரன் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து குடும்பப் படமாக இப்படம் உருவாகி வருகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை கமல்ஹாசன் வெளியிட்டார்.