தமிழக வீரர் குகேஷ் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றதையடுத்து, அவர் பெற்ற பரிசுத் தொகை குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் குகேஷ் 2.50 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் 21.20 கோடி ரூபாய்) பரிசுத் தொகையை வென்றார். இதில், குகேஷுக்கு 1.35 மில்லியன் டாலர்கள் (அதாவது ₹11.45 கோடி), அவரது போட்டியாளரான டிங் லிரனுக்கு 1.15 மில்லியன் டாலர்கள் (சுமார் ₹9.75 கோடி) வழங்கப்பட்டது.
மாறாக, ஐபிஎல் ஏலத்தில் சில வீரர்கள் குகேஷ் பெற்ற பரிசுத் தொகையை விட அதிகமாக விற்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ரிஷப் பந்த் ரூ. 27 கோடி, இது குகேஷ் பெற்ற பரிசுத் தொகையை விட சுமார் 2.5 மடங்கு அதிகம்.
இந்நிலையில், குகேஷின் வெற்றி மற்றும் பரிசுத் தொகை குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், தமிழக அரசு குகேஷுக்கு ₹5 கோடி ரொக்கப் பரிசாக வழங்கியுள்ளது.