சென்னை: தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டலத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரணமாக தென்கிழக்கு வங்கக் கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம். இது மேலும் வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி அடுத்த இரண்டு நாட்களில் நகரக்கூடும். இதன் காரணமாக, டிச., 16 முதல் டிச., 18 வரை, தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:- தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டலத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக தென்கிழக்கு வங்கக் கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம். இது மேலும் வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி அடுத்த 2 நாட்களில் நகர வாய்ப்புள்ளது.
லட்சத்தீவு – மாலத்தீவு பகுதிகளில் நேற்று நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்றும் அதே பகுதிகளில் நிலவி வருகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து வலுவிழக்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
டிசம்பர் 15-ம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. டிசம்பர் 16-ம் தேதி கடலோர தமிழகத்தின் அனேக இடங்களிலும், உள் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
டிசம்பர் 17-ம் தேதி தமிழகத்தின் அனேக இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுச்சேரி, திருச்சி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் டிசம்பர் 18-ம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அனேக இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
டிசம்பர் 19-ம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். டிசம்பர் 20-ம் தேதி தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.
தமிழக கடலோரப் பகுதிகளில், டிசம்பர் 17 மற்றும் 18-ம் தேதிகளில் தமிழகத்தின் கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும், அவ்வப்போது மணிக்கு 55 கிமீ வேகத்திலும் சூறாவளி புயல் வீசக்கூடும். வங்கக் கடலில் இன்று அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்தில் சூறாவளி புயல்கள் வீசக்கூடும், மேலும் அவ்வப்போது மணிக்கு 55 கி.மீ. டிசம்பர் 15 அன்று, தென்கிழக்கு வங்காள விரிகுடா, அதை ஒட்டிய பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதியில் 35 முதல் 45 கிமீ வேகத்தில் சூறாவளி புயல்கள் வீசக்கூடும்.
மேலும் அவ்வப்போது மணிக்கு 55 கிமீ வேகத்தை எட்டும். டிசம்பர் 16-ம் தேதி, புயல் புயல் தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக் கடலில் நிலவும், மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்தில் சில நேரங்களில் மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசக்கூடும், மேலும் மேற்கு-மத்திய அரேபிய பகுதியில் கடல், மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்தில் சில நேரங்களில் மணிக்கு 65 கிமீ வேகத்தில் வீசும்.