சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன், அமரன் படம் மூலம் கோலிவுட்டில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி, அடுத்த கட்டத்திற்கு முன்னேறியுள்ளார். காமெடி ஹீரோவாகப் பரவலாக அறியப்பட்ட அவர், அமரன் படத்தின் மூலம் மாஸான கதாபாத்திரத்தில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்தார். அடுத்ததாக, அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு படத்தில் இணைந்துள்ளார்.
இந்தப் படத்தின் பூஜை இன்று சென்னையில் சிறப்பாக நடத்தப்பட்டது. இதில் சிவகார்த்திகேயனுடன் ஜெயம் ரவி, அதர்வா உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கின்றனர்.
முன்னதாக இந்தப் படத்தில் நடிகர் சூர்யா, நஸ்ரியா, துல்கர் சல்மான் உள்ளிட்டோர் இணைவதற்காக பரிசீலிக்கப்பட்டிருந்தனர். ஆனால், அந்தப் படத்தின் பணிகள் சில காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்பட்டு, தற்போது சிவகார்த்திகேயன் கதையில் இணைந்துள்ளார்.
இந்தப் படத்தில் ஜெயம் ரவி வில்லனாக நடிப்பதாக தகவல் கிடைத்துள்ளது.