பாட்னா: பீகாரில் அரசு ஆட்களுக்கு கடும் போட்டி நிலவுவதால், அரசு ஊழியர்களை கடத்தி கட்டாயப்படுத்தி திருமணம் செய்யும் வழக்கம் அதிகரித்துள்ளது. பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தில் உள்ள ராஜவுரா பகுதியைச் சேர்ந்த அவ்னிஷ் குமார் என்பவர் சமீபத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெற்றார்.
இதையடுத்து, கதிஹார் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். நேற்று முன்தினம், சொகுசு கார்களில் வந்த மர்ம நபர்கள் சிலர், அவ்னிஷ்குமாரை கடத்தி, துப்பாக்கி முனையில் குஞ்சன் என்ற பெண்ணை திருமணம் செய்ய வற்புறுத்தினர். மணப்பெண்ணின் உத்தரவின் பேரில் இந்த கடத்தல் திருமணம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.