மேஷம்: பிரபலங்களின் உதவியை நாடுவீர்கள். மனைவியின் விருப்பத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் வரும். அலுவலகப் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.
ரிஷபம்: உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். பண வரவு அதிகரிக்கும். பிரபலங்களுடன் நட்பு வளரும். வீட்டில் அமைதி நிலவும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். கவனமாக வாகனத்தை ஓட்டவும்.
மிதுனம்: சோர்வு, வயிற்றுப் பிரச்சனைகள் வந்து நீங்கும். கடினமாக உழைத்து சில வேலைகளை முடிப்பீர்கள். வியாபாரத்தில் சண்டையிட்டு பாக்கி வசூலிப்பீர்கள். வாகனத்தில் பணம் செலவாகும்.
கடகம்: பணப்பற்றாக்குறை நீங்கும். விரும்பியவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். உங்கள் பிள்ளைகளை நன்றாக வழிநடத்துவீர்கள். சில வேலைகளை மனநிறைவுடன் முடிப்பீர்கள்.
சிம்மம்: எதிர்பார்த்தபடி பணம் வரும். பழைய பிரச்சனை சுமூகமாக தீர்க்கப்படும். உங்கள் பேச்சுக்கு குடும்பத்தில் மதிப்பு கூடும். அடிக்கடி தொந்தரவு கொடுத்து வந்த வாகனத்தை மாற்றுவீர்கள்.
கன்னி: அலைச்சல், சோர்வு, கோபம் குறையும். கணவன்-மனைவி இடையே நல்லுறவு ஏற்படும். குழந்தைகள் பொறுப்பாக இருப்பார்கள். பயணத்தின் போது கவனமாக இருக்க வேண்டும். பொருட்கள் சேரும்.
துலாம்: ஏற்கனவே செய்த உதவிகளுக்கு பாராட்டு கிடைக்கும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்கள் மத்தியில் உங்கள் மரியாதை அதிகரிக்கும். உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள்.
விருச்சிகம்: சிறு கவலைகள் வந்து நீங்கும். நீங்கள் ஒன்றைச் சொல்வீர்கள், மற்றவர்கள் அதை வேறு விதமாகப் புரிந்துகொள்வார்கள். எனவே, பேச்சில் அதிக பொறுமையும் நிதானமும் அவசியம். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.
தனுசு: பயம், பதட்டம், தயக்கம் நீங்கும். எடுத்த வேலையை முடிப்பதில் வைராக்கியம் ஏற்படும். மூதாதையர் சொத்துக்களை மறுசீரமைப்பீர்கள். அலுவலகத்தில் பணிகள் விரைந்து முடிவடையும்.
மகரம்: இலக்கை அடைய முயற்சி செய்வீர்கள். புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
கும்பம்: பழைய நண்பர்களால் லாபம் உண்டாகும். குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளால் உங்கள் நிலை உயரும். தொழிலில் வராது என்று நினைத்த பழைய கடன்கள் வந்து சேரும்.
மீனம்: குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். சேமிப்பு அதிகரிக்கும். வெளி வட்டாரத்தில் மரியாதை அதிகரிக்கும். குலதெய்வ பிரார்த்தனைகள் நிறைவேறும். வியாபாரம் திருப்திகரமாக இருக்கும்.