புச்சி பாபு சனா இயக்கும் புதிய படத்தில் ராம் சரண் நடிக்கிறார். இப்படத்தின் ஆரம்ப கட்ட வேலைகளில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால், அதில் அவர் நடிக்கவில்லை. அவருக்கு பதிலாக சிவராஜ்குமார் நடிப்பார் என்று தெரிகிறது. விஜய் சேதுபதி தற்போது ஐதராபாத்தில் ‘விடுதலை 2’ படத்தின் புரமோஷன் செய்து வருகிறார்.
அவரிடம், “ஆர்சி 16-ல் நடிக்கப் போகிறீர்களா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “நான் படத்தில் நடிக்கவில்லை. ஏனென்றால் எனக்கு நேரமில்லை. நான் பலவிதமான கதைகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். சில கதைகள் நன்றாக இருந்தாலும் அதில் என் கதாபாத்திரம் போதுமானதாக இருக்காது.
இதற்கு முன் புச்சி பாபு சனாவின் முதல் படமான ‘உப்பெனா’ படத்தில் கதாநாயகியின் அப்பாவாக விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அன்று முதல் புச்சி பாபு சனாவும், விஜய் சேதுபதியும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.