கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் வெடிகுண்டு மிரட்டல் வருவதைப் பார்த்து விசாரித்தபோது அது போலி மிரட்டல் என்பது தெரியவந்தது.
கடந்த காலங்களில் சென்னை விமான நிலையத்திற்கு ஏற்கனவே 3 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில், கவர்னர் மாளிகை உள்ளிட்ட பல முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாகவும், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என மின்னஞ்சல் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
நேற்று நள்ளிரவு இந்த மின்னஞ்சல் வந்ததையடுத்து, காவல் துறையினர் உடனடியாக மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தி, தீவிர சோதனைக்குப் பிறகு வெடிகுண்டு மிரட்டல் புரளி எனத் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருவதாகவும், அவர்கள் விரைவில் கண்டுபிடிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.