தேங்காய் எண்ணெயில் பல நன்மைகள் உள்ளன. குறிப்பாக, தேங்காய் எண்ணெய் பூஞ்சை தொற்றுகளை அழிக்க வல்லது. தேங்காய் எண்ணெய் தலைக்கு மட்டுமின்றி முகத்திற்கும் நன்மைகள் நிறைந்தது. தேங்காய் எண்ணெய் முகத்திற்கு எல்லா வகையிலும் பயனுள்ளதாக இருக்கும். இயற்கையாகக் கிடைக்கும் தேங்காய் எண்ணெயை மேக்கப் ரிமூவராகப் பயன்படுத்தினால், உங்கள் சருமம் பாதிப்பில் இருந்து தப்பிக்க உதவும்.
உங்கள் உடலில் இருந்து உறிஞ்சப்பட்ட ஈரப்பதத்தை மீட்டெடுக்க தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தேங்காய் எண்ணெயில் சிறிது சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும். இந்தக் கலவையை முகத்தில் வலமிருந்து இடமாகவும், இடமிருந்து வலமாகவும் ஸ்க்ரப்பராகப் பயன்படுத்தி, வட்டமாக மசாஜ் செய்து வந்தால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், வெள்ளைத் திட்டுகள், சிறு முடிகள் நீங்கி முகம் பொலிவு பெறும்.
குழந்தைகளை குளிப்பாட்டிய பின், தேங்காய் எண்ணெயை தலைக்கு மட்டுமின்றி கழுத்து மற்றும் முதுகில் தடவுவது நல்லது. முகத்தில் ஏற்படும் அலர்ஜியால் பலர் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர். இத்தகைய அலர்ஜியை போக்க தேங்காய் எண்ணெய் உதவும். தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் இதற்கு பெரிதும் உதவுகின்றன. இந்த எண்ணெயை ஃபேஸ் வாஷ் போல் மசாஜ் செய்து தினமும் காலையில் முகத்தைக் கழுவி வந்தால் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி முகம் சுத்தமாகும்.