திருப்பூர்: வாடகை கட்டிடங்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு விதித்துள்ளது. இதனால் கடைகள், தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு வழிகளிலும் வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக திருப்பூர் அனைத்து வியாபாரிகள் சங்கம் மற்றும் அனைத்து தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பும் அறிவித்திருந்தன.
அதன்படி, இன்று காலை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெட்டிக் கடைகள், டீக்கடைகள், ஓட்டல்கள், பேக்கரிகள், மளிகைக் கடைகள், ஜவுளி, நகைக்கடைகள், ஜவுளி, நகைக்கடைகள் உள்ளிட்ட வணிக வளாகங்கள், சில பனியன் நிறுவனங்களும் போராட்டத்தில் ஈடுபட்டன. இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த போராட்டத்திற்கு ஒரு சில கட்சிகள் தவிர மற்ற கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இதேபோல் அனைத்து வர்த்தக அமைப்புகள், வணிகர் சங்கங்கள், தொழில் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. அவிநாசியிலும் கடையடைப்பு போராட்டம் நடந்தது. திருப்பூர் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம், அவிநாசி கிணாய் அவிநாசி நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம், அவிநாசி பைக் டெக்னீஷியன்கள் சங்கம், அவிநாசி தினசரி மார்க்கெட் வர்த்தகர்கள் நல சங்கம், திருப்பூர் மாவட்ட செல்லுலார் சங்கம், ஜவுளி கடை உரிமையாளர்கள் சங்கம், திருப்பூர் மாவட்ட போட்டோ மற்றும் வீடியோ சங்கம், அவிநாசி அனைத்து வணிகர் சங்கம், மளிகை வியாபாரிகள் சங்கம், அரிசி ஆலை மற்றும் நெல் அரிசி வியாபாரிகள் சங்கம், இந்தப் போராட்டத்திற்கு அவிநாசி வாகனப் பணிமனை நண்பர்கள் நலச் சங்கம், தமிழ்நாடு சவரத் தொழிலாளர்கள் சங்கம், மோட்டார் வாகன ஆலோசகர்கள் நலச் சங்கம், அவிநாசி ஹார்டுவேர் எலக்ட்ரிக்கல் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் ஆதரவு தெரிவித்து கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.