மக்களவையில் திங்கள்கிழமை ராகுல் காந்தியின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்த பல்வேறு மதங்களைச் சேர்ந்த தலைவர்கள், அந்த உரையில் அபய முத்திரை குறித்து ராகுல் காந்தி கூறியதற்கு விளக்கம் கேட்டுள்ளனர்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மதச் சின்னங்கள் மற்றும் போதனைகளை குறிப்பிட்டு அரசை விமர்சித்து பேசியது வைரலாகி வருகிறது. அதே சமயம் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.
சிவபெருமானின் அபய முத்திரையைக் குறிப்பிட்டு மூச்சு விடாமல் சுமார் ஒரு மணி நேரம் பேசினார். அப்போது சிவபெருமானின் படத்தையும் காட்டினார். இது பா.ஜ.க கூட்டணி கட்சியினரை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியது. அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.
அகிம்சை மற்றும் பாஜகவை எதிர்த்துப் போராடுவதில் பல்வேறு மதங்களின் பங்கு குறித்து ராகுல் காந்தி பேசினார். நரேந்திர மோடி தனது உரையின் போது இரண்டு முறை குறுக்கிட்டார். இந்துக்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் வன்முறையாளர்கள் என்று ராகுல் காந்தி கூறியதும், உடனே மோடி எழுந்து, இந்துக்கள் அனைவரையும் வன்முறையாளர்கள் என்று அழைப்பது தவறு என்று கூறினார்.
நீட் தேர்வை வணிக தேர்வாக மாற்றிய பாஜக! மக்களவையில் ராகுல் காந்தி அனல் பறக்கும் பேச்சு!
ராகுல் காந்தியின் கருத்து இந்து மதத்தை அவமதிக்கும் வகையில் உள்ளது என்றும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இந்து முன்னணியினர் தெரிவித்துள்ளனர். ராகுல் காந்தியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள சுவாமி அவதேசானந்த் கிரி, “இந்துக்கள் அகிம்சை மற்றும் ஒற்றுமைக்கு பெயர் பெற்றவர்கள் என்றும், ராகுல் காந்தியின் பேச்சு ஒட்டுமொத்த இந்து சமுதாயத்தையும் அவமதிக்கும் செயலாகும்.
இந்துக்களை வன்முறையாளர்களாக சித்தரித்து வெறுப்பை பரப்பியதற்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இதேபோல், அகில இந்திய சூஃபி சஜ்ஜதநாஷ் கவுன்சில் தலைவர் சையத் நஸ்ருதீன் சிஷ்டி மற்றும் அஜ்மீர் தர்கா ஷெரீப் ஹாஜி சையத் சல்மான் சிஷ்டி ஆகியோர் அபய முத்ரா இஸ்லாத்துடன் தொடர்புடையது என்ற ராகுல் காந்தியின் கூற்றை மறுத்துள்ளனர்.
இஸ்லாமிய வணக்கத்திலோ, வேதங்களிலோ இத்தகைய சைகைகளுக்கு இடமில்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளனர். மேலும், இஸ்லாம் மதத்துடன் தொடர்புடைய தவறான சின்னங்களைப் பற்றி பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி கேட்டுக் கொண்டார்.
சீக்கியம் உள்ளிட்ட மதங்கள் குறித்து சரியான தகவல்கள் இல்லாமல் ராகுல் காந்தி பேசியதாக பாட்னா குருத்வாரா தலைவர் ஜக்ஜோத் சிங் தெரிவித்துள்ளார். கருத்துக்களை வெளிப்படுத்தும் முன் மத போதனைகளை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.
மக்களவையில் திங்கள்கிழமை ராகுல் காந்தியின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்த பல்வேறு மதங்களைச் சேர்ந்த தலைவர்கள், அந்த உரையில் அபய முத்திரை குறித்து ராகுல் காந்தி கூறியதற்கு விளக்கம் கேட்டுள்ளனர்.