மகாராஷ்டிர துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜித் பவார் மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:- மகாராஷ்டிர மாநிலம் நாசிக் பகுதியில் விளையும் வெங்காயம், நாட்டின் பிற மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தற்போது, சந்தையில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள வெங்காயம் அதிக அளவில் இருப்பதாலும், குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்காததாலும், விவசாயிகள் வெங்காயத்தை மிகக் குறைந்த விலைக்கு விற்க வேண்டியுள்ளது. ஏற்றுமதி செய்யப்படும் வெங்காயத்திற்கு 20 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளதால், இந்திய விவசாயிகள் சர்வதேச சந்தையில் போட்டியிட முடியாமல் திணறி வருகின்றனர். எனவே, 20 சதவீத ஏற்றுமதி வரியை நீக்க வேண்டும். இவ்வாறு அஜித் பவார் கூறினார்.