சென்னை: சர்வதேச பொருளாதார சூழலுக்கு ஏற்ப, இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது மாறி, ஏற்ற இறக்கமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று குறைந்த விலையில் இருந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 7,100-க்கும், பவுனுக்கு ரூ. 480 உயர்ந்து ஒரு பவுன் ரூ. 56,800-க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலையும் ரூ.1 அதிகரித்துள்ளது. 1 கிராம் ரூ. 99-க்கு விற்பனையாகிறது.