தென்னாப்பிரிக்க வீரர் ஹெய்ன்ரிச் கிளாசன், ஆட்டம் இழந்ததால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக ஸ்டெம்புகளை காலால் எட்டி உதைத்தார். இதனை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அவருக்கு அபராதம் விதித்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.
முதல் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருந்த நிலையில், இரண்டாவது போட்டி கடந்ததாக கேப்டவுன் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி பவுலிங்கை தேர்வு செய்தது. பாகிஸ்தான் 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 329 ரன்கள் எடுத்தது. அதில் ரிஸ்வான் 80 ரன்கள், பாபர் ஆசம் 73 ரன்கள் எடுத்தனர்.
அதிரடியாக ரன்கள் சேர்த்த காம்ரான் குலாம் 32 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்க அணி 330 ரன்கள் அடித்தால் வெற்றி கிடைக்கும் என்ற இலக்குடன் துவங்கியது. ஆனால் நிலையான பார்ட்னர்ஷிப்பை எந்த பேட்ஸ்மேன் சார்ந்தும் உருவாக்க முடியவில்லை. அதேவேளை, ஹெய்ன்ரிச் கிளாசன் 74 பந்துகளில் 97 ரன்கள் குவித்து கடுமையாக முயற்சித்தார்.
இருப்பினும், தென் ஆப்பிரிக்க அணி 43.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 248 ரன்கள் மட்டுமே எடுத்தது. 3 ரன்களில் சதத்தை தவறவிட்ட கிளாசன் அணி தோல்வியடைந்ததன் பின்னர் ஸ்டெம்பை காலால் உதைத்தார். இந்த விவகாரத்தில் ஐசிசி அவரது போட்டிக்கான கட்டணத்தில் இருந்து 15 சதவீதம் அபராதம் விதித்துள்ளது.
இது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.