மாரடைப்புக்கு பிறகு பலர் மனச்சோர்வடைந்து விடுகின்றனர். அவர்கள் எப்போது மீண்டும் மாரடைப்பு வருமோ என்ற எண்ணத்திலேயே கவலையாக இருக்கிறார்கள். ஆனால், மருத்துவர்கள் கூறுவது என்னவெனில், தகுந்த கவனிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்துகிறார்கள். ஸ்டென்ட் வைத்த பிறகு, மீண்டும் மாரடைப்பு வராமல் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வாழ முடியும்.
முதலில், கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருப்பது முக்கியம். குறிப்பாக, கெட்ட கொலஸ்ட்ரால் (LDL) அளவை 55 mg/dL க்கும் குறைவாக வைத்திருக்க வேண்டும். எல்டிஎல் அளவு குறைவாக இருந்தால், இரத்த நாளங்களில் பிளேக் உருவாகும் ஆபத்து குறையும். LDL அளவு 70 mg/dL க்கு கீழே குறைந்தால், பிளேக்குகளின் வளர்ச்சி முற்றிலும் நின்றுவிடும்.
அடுத்து, உடல்நலப் பிரச்சனைகளான இரத்த அழுத்தம், அதிக எடை மற்றும் நீரிழிவு போன்றவை கட்டுக்குள் வைத்திருப்பது முக்கியம். இவற்றில் ஏதேனும் கட்டுப்பாட்டை மீறினால், சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனைத் தவிர்க்க, முறையான உணவுப் பழக்கம், வழக்கமான உடற்பயிற்சி மற்றும் மருத்துவர்கள் அளிக்கும் அறிவுரைகளைப் பின்பற்றுவது அவசியம்.
இதன் மூலம், ஸ்டென்ட் வைத்த பிறகு மீண்டும் மாரடைப்பு வரும் ஆபத்துகளை குறைத்துக் கொள்ள முடியும். அதேவேளை, வாழ்க்கை முறையில் எதார்த்தமான மாற்றங்கள் செய்வதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையை நீடித்து வாழலாம்.