புதுடெல்லி: கடந்த அதிமுக ஆட்சியில் செந்தில் பாலாஜிக்கு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி முறைகேடாக பணப் பட்டுவாடா செய்ததாக அமலாக்க இயக்குனரகம் கடந்த ஜூன் 14-ம் தேதி கைது செய்தது. பல கட்ட விசாரணைக்கு பின் கடந்த செப்டம்பர் 26-ம் தேதி செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி ஒய்.பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வு, “இந்த விவகாரத்தில் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறுஆய்வு செய்ய எந்த அடிப்படையும் இல்லை.
மேலும், ஜாமீனை ரத்து செய்யக் கோரிய இடைக்கால மனு ஏற்கனவே இந்த பெஞ்ச் முன் நிலுவையில் உள்ளது. எனவே, அதன் அடிப்படையில் ஒய்.பாலாஜியின் மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்கிறோம்’’ என்று கூறி வழக்கை முடித்து வைத்தார்.