பழங்களில் வைட்டமின்கள், அத்தியாவசிய மினரல்ஸ்கள், நீர்ச்சத்துக்கள், ஆன்டி ஆக்சிடென்டுகள் உள்பட உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளனது. உடலுக்கு நன்மை சேர்க்கும் என்றாலும் அதிகமாக உட்கொள்ளும்போது நீரிழிவு, இதயநோய், உடல் பருமன் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். எனவே எந்தெந்த பழங்களில் சர்க்கரை அளவு குறைவாக இருக்கிறது என்பது பற்றி பார்ப்போம். அவகேடோ: அவகேடோவில் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளது, இது இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. ஒரு பழத்தில் 1 கிராமுக்கு குறைவான சர்க்கரை அளவு உள்ளது. அதனால் இது குறைந்த அளவு சர்க்கரை கொண்ட பழமாக கருதப்படுகிறது. அவகேடோ பழங்களில் நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் ஈ மற்றும் ஃபோலேட் ஆகியவை நிறைந்துள்ளன. அவகேடோ பழத்தில் குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் போன்ற இயற்கை சர்க்கரைகள் உள்ளது.
மேலும் இதில் சிறிது சுக்ரோஸ் உள்ளது. அவற்றில் ஆரோக்கியமான கொழுப்புகள் அதிகம் உள்ளன, குறிப்பாக மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள், இதய ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கும். ப்ளாக்பெர்ரி: ப்ளாக்பெர்ரி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் ஆன்டிஆக்ஸிடென்ட், வைட்டமின்களை வழங்குகிறது. ப்ளாக்பெர்ரிகள் மற்றொரு குறைந்த சர்க்கரை அளவு கொண்ட பழமாகும், ஒரு கப்பில் சுமார் 7 கிராம் சர்க்கரை அளவு உள்ளது. இதில் நார்ச்சத்து, வைட்டமின்கள் சி மற்றும் கே மற்றும் மாங்கனீஸ் ஆகியவை நிறைந்துள்ளன. ஆரஞ்சு: ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால், இது தோல் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. இது இனிப்பு மற்றும் கசப்பான சுவை கொண்ட குறைந்த சர்க்கரை அளவு கொண்ட பழமாகும். ஒரு ஆரஞ்சுப் பழத்தில் 13 கிராமுக்குக் குறைவான சர்க்கரை உள்ளது.
இதில் கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. திராட்சைப்பழம்: திராட்சைப்பழம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் எடை குறைப்பை ஆதரிக்கிறது. சிவப்பு மற்றும் ஊதா ஆகிய இரண்டு வகைகளை கொண்ட திராட்சைகளில் ஆன்டிஆக்ஸிடென்ட்கள் நிரம்பியுள்ளன. ஒரு கப் திராட்சையில் சுமார் 23 கிராம் சர்க்கரை உள்ளது. திராட்சைகளில் வைட்டமின் கே, வைட்டமின் சி மற்றும் பல பி வைட்டமின்களின் நிறைந்துள்ளன. திராட்சை இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது மற்றும் ஆன்டி இன்ஃபிபளமேடரி பண்புகளைக் கொண்டுள்ளது. ஸ்ட்ராபெர்ரிகள்: ஸ்ட்ராபெர்ரிகள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது மற்றும் சரும ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. ஸ்ட்ராபெர்ரிகள் : ஸ்ட்ராபெர்ரி குறைந்த சர்க்கரை அளவு கொண்ட பழமாகும், ஒரு கப்பில் சுமார் 7 கிராம் சர்க்கரை அளவு உள்ளது.
அவை வைட்டமின் சி, மாங்கனீஸ், ஃபோலேட் மற்றும் பல்வேறு ஆன்டிஆக்ஸிடென்ட்கள் நிரம்பியுள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் நோயெதிர்ப்பு சக்தியை ஆதரிக்கவும், உடலில் உள்ள வீக்கத்தைக் குறைக்கவும், நாள்பட்ட நோய்களிலிருந்து பாதுகாக்கவும் உதவுகின்றன. ராஸ்பெர்ரி: ராஸ்பெர்ரிகள் மற்றொரு குறைந்த சர்க்கரை அளவு கொண்ட பழமாகும், ஒரு கப்பில் சுமார் 5 கிwராம் சர்க்கரை அளவு உள்ளது. ராஸ்பெர்ரிகளில் அதிக நார்ச்சத்து, வைட்டமின்கள் சி மற்றும் கே, மாங்கனீசு மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆகியவை நிறைந்துள்ளன. இது செரிமானத்திற்கு உதவுகிறது. மேலும் ராஸ்பெர்ரிகளில் குர்செடின் மற்றும் எலாஜிக் ஆசிட் உள்ளிட்ட ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, அவை ஆன்டி இன்ஃபிளமேட்டரி மற்றும் ஆன்டி கேன்சர் ஆகிய பண்புகளைக் கொண்டுள்ளன.
கிவி: கிவி நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது மற்றும் செரிமானத்தை ஆதரிக்கிறது. இதில் வைட்டமின் சி, வைட்டமின் கே, வைட்டமின் ஈ, ஆண்டி ஆக்ஸிடெண்ட் மற்றும் பொட்டாசியம் ஆகியவை நிறைந்துள்ளன. ஒரு நடுத்தர கிவிஸ் பழத்தில் சுமார் 6 கிராம் சர்க்கரை அளவு உள்ளது. தர்பூசணி: தர்பூசணி தாகத்தை தணிப்பது மட்டுமன்றி உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்வதிலும் தர்பூசணி சிறந்தது. தர்பூசணி ஊட்டச்சத்துக்களின் ஆதாரமாக உள்ளது. குறிப்பாக கோடைக்காலத்தில் உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள உதவுகிறது. தர்பூசணி ஆண்டி ஆக்ஸிடண்டின், வைட்டமின் சி மற்றும் லைகோபீன் உள்ளதால் செல்களின் சேதத்தை தடுக்கிறது.