சென்னை: சென்னை தி.நகரில் மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து கொண்டிருந்தபோது தி.நகர் லாலா தோட்டம் 2-வது தெருவில் உள்ள ஒரு வீட்டின் தரைப்பகுதி திடீரென்று மண்ணில் புதைந்தது. இதனால் வீட்டுக்குள் பள்ளம் ஏற்பட்டது.
சென்னை தி.நகரில் தற்போது மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக பல இடங்களில் சுரங்கம் தோண்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து கொண்டிருந்தபோது தி.நகர் லாலா தோட்டம் 2-வது தெருவில் உள்ள ஒரு வீட்டின் தரைப்பகுதி திடீரென்று மண்ணில் புதைந்தது. இதனால் வீட்டுக்குள் பள்ளம் ஏற்பட்டது.
அந்த நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த தகவல் அறிந்ததும் மெட்ரோ ரெயில் அதிகாரிகள் அங்கு சென்றனர். பின்னர் கான்கிரீட் கலவையை கொட்டி அந்த வீட்டில் ஏற்பட்ட பள்ளத்தை மெட்ரோ ரெயில் ஊழியர்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.