சென்னை: நம்முடைய வீட்டிற்கு தலைவாசல் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதேபோல் முக்கியத்துவம் வாய்ந்தது ஜன்னல்கள். வடக்கு ஜன்னல் என்பது நம்முடைய வீட்டில் வடகிழக்கு பகுதியில் வடக்கு சுவற்றில் வரக்கூடியது.
இந்த வடக்கு ஜன்னல் வீட்டின் ஆண்களின் வருமானத்தை தீர்மானிப்பது. எனவே வடக்கு ஜன்னலை பகல்பொழுது முழுவதும் திறந்து வைப்பதே நல்லது.
ஜன்னல் இருந்து திறந்து வைக்காமல் இருப்பதும், ஜன்னல்கள் இல்லாத அமைப்பில் குடியிருப்பதும் தவறு.
பல இடங்களில் பெண்களின் வருமானத்தை வைத்து குடும்ப நடத்தும் சூழ்நிலையில் தள்ளப்படுவதும் உண்டு.
கிழக்கு ஜன்னல் நம்முடைய வீட்டில் வடகிழக்கு பகுதியில் கிழக்கு சுவற்றில் வரக்கூடியது. இந்த கிழக்கு ஜன்னலே வீட்டில் உள்ளவர்களின் அனைவரின் ஆரோக்கியத்தை தீர்மானிப்பது.
அதுமட்டுமல்லாது பெண்களின் தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் கொடுக்கவல்லது. இந்த கிழக்கு ஜன்னலே பெண்களின் வருமானத்தை தீர்மானிப்பது.
கிழக்கு பகுதியில் ஜன்னல் இல்லாமல் இருப்பதும், ஜன்னல்கள் இருந்தும் திறந்து வைக்காமல் இருப்பதும் இரண்டுமே தவறு.
கிழக்கு பகுதியில் ஜன்னல்கள் இல்லாத போது அனைத்து கெட்ட பலன்கள் அந்த வீட்டில் உள்ளவர்கள் மீதே அமையும். அதில் ஆண், பெண் இருவருக்குமே நிரந்தர வேலையில்லாத நிலைமை ஏற்படக்கூடும்.
வீட்டிற்கு தேவையான ஃபர்னிச்சர் வாங்கும்முன், அது பிரமாண்டமாக இருக்கிறதா, அலங்காரமாக இருக்கிறதா என்பதை எல்லாம் பார்க்காமல், எந்த அறைக்கானது, எந்த பயன்பாட்டுக்கானது என்பதன் அடிப்படையில் வாங்குவது நல்லது.
உங்கள் வீடு ஏதேனும் ஒரு குறிப்பிட்ட தீம் அல்லது கான்செப்ட் அடிப்படையில் கட்டப்பட்டிருந்தால், அது சார்ந்த ஃபர்னிச்சர்களைத் தேர்வு செய்து வாங்குவதன் மூலம் வீட்டின் அழகை கூடுதலாக்கலாம்.
பாரம்பர்யமான தோற்றம் கொண்ட ஃபர்னிச்சர்கள், நவீன தோற்றம் தரும் ஃபர்னிச்சர்கள் என இரண்டு வகையிலும் ஃபர்னிச்சர்கள் கிடைக்கின்றன. இதில் எது உங்கள் சாய்ஸ் என்பதை முன்பே தீர்மானித்துக்கொள்ளவும். தேக்கு, கோங்கு, மல்பெரி எனப் பல வகையான மரங்களில் ஃபர்னிச்சர்கள் தயார் செய்யப்படுகின்றன.
நீங்கள் ஃபர்னிச்சர் வாங்கும்போது அதில் செய்யப்பட்டு இருக்கும் நுணுக்கமான வேலைப்பாடுகளைவிட, அதை உருவாக்கிய முறை மிக முக்கியம். மரப் பொருள்கள் செய்யும்போது மரங்களை ஒன்றுடன் ஒன்று இணைக்க ஆணி அடிப்பது, எதிரெதிர் முனைகளை ஒன்றுடன் ஒன்று பொருத்துவதற்கு ஏற்ற வகையில் கட் செய்து இணைக்கும் வேலைப்பாடு, மரத்தில் துளையிட்டு இணைப்பு வேலைகளைச் செய்யும் ரகம் என மூன்று வகையில் மரப் பொருள்கள் உருவாக்கப்படுகின்றன.