வாஷிங்டன்: வெள்ளை மாளிகையின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கொள்கையின் AI பிரிவின் மூத்த கொள்கை ஆலோசகராக ஸ்ரீராம் கிருஷ்ணன் பணியாற்றுவார் என்று டிரம்ப் உத்தரவில் தெரிவித்துள்ளார். கிருஷ்ணன் இதற்கு முன்பு மைக்ரோசாப்ட், ட்விட்டர், யாகூ, ஃபேஸ்புக், ஸ்னாப் போன்ற நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார்.
அவர் வெள்ளை மாளிகை AI மற்றும் கிரிப்டோ இயக்குநராக பணியாற்றும் டேவிட் ஓ. சாக்ஸுடன் இணைந்து பணியாற்றுவார். புதிய நிலை குறித்து ஸ்ரீராம் கிருஷ்ணன், “AI துறையில் அமெரிக்கா தொடர்ந்து முன்னணியில் இருப்பதை உறுதி செய்வதன் மூலம் நம் நாட்டுக்கு சேவை செய்வதில் பெருமை கொள்கிறேன்” என்றார்.
ஸ்ரீராம் கிருஷ்ணன் பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாம் சென்னையில்தான். முன்னதாக, டிரம்ப் தனது நெருங்கிய நம்பிக்கையாளரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேலை மத்திய புலனாய்வுப் பிரிவின் (எஃப்பிஐ) இயக்குநராக நியமித்தார். உளவுத்துறை இயக்குநராக துளசி கப்பார்டை தேர்வு செய்தார். இப்போது, அவர் அமெரிக்க AI தொழில்நுட்பத் துறையின் கொள்கை ஆலோசகராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணனை நியமித்துள்ளார்.