சென்னை: சினிமா பற்றி அறியாத கிராம மக்கள் எப்படி படம் எடுத்தார்கள் என்பதை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ‘பயாஸ்கோப்’. ஜனவரி 3-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. ‘வெங்காயம்’ படத்தைத் தொடர்ந்து சங்ககிரி ராஜ்குமார் எழுதி இயக்கியுள்ள படம். 25 டாட்ஸ் கிரியேஷன்ஸ் சார்பில் சந்திர சூர்யன், பிரபு சுப்ரமணி, பெரியசாமி ஆகியோர் தயாரித்துள்ளனர்.
சத்யராஜ், சேரன் சிறப்பு வேடங்களில் நடிக்கின்றனர். மேலும் சங்ககிரி ராஜ்குமார், சங்ககிரி மாணிக்கம் ஆகியோர் நடிக்கின்றனர். படம் பற்றி சங்ககிரி ராஜ்குமார் கூறும்போது, “நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்து, ‘வெங்காயம்’ படத்தை இயக்கியபோது நான் சந்தித்த சவால்களையும், அதனால் ஏற்படுத்திய தாக்கத்தையும் வெளிப்படுத்தும் படமாக ‘பயாஸ்கோப்’ உருவாகியுள்ளது. இது முழு நீள நகைச்சுவைப் படம். முரளி கணேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார், தாஜ்னூர் இசையமைத்துள்ளார்.