தஞ்சாவூர்: வடகிழக்கு பருவமழை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாக பெய்து குறிப்பிட்ட நேரத்தில் பெய்து வருகிறது. இதனால் நெல், உளுந்து, கடலை, மக்காச்சோளம், கத்தரி, பீன்ஸ், அவரை, வாழை உள்ளிட்ட விவசாய பயிர்கள் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன.
தக்காளி, பூண்டு, வெங்காயம், அவரை, பீன்ஸ், கத்தரி உள்ளிட்ட காய்கறிகள் உற்பத்தி குறைந்து வரத்து குறைந்துள்ளது. இதனால் காய்கறி விலை அடிக்கடி உச்சத்தை எட்டி வருவதால் இல்லத்தரசிகள் அச்சமடைந்துள்ளனர். அதில், கடந்த வாரம் ரூ. 90-க்கு விற்கப்பட்ட பீன்ஸ், அவரைக்காய் விலை படிப்படியாக அதிகரித்து, நேற்று பீன்ஸ் ஒரு கிலோ ரூ. 110 மற்றும் அவரை ரூ. 120-க்கும் விற்பனையானது.
இதனால் இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:- ஓசூர், கர்நாடகா மாநிலங்களில் இருந்து அதிக அளவில் பீன்ஸ் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் அவரைக்காய் பயிர் சேதம் அடைந்ததால் வரத்து குறைந்துள்ளது. இதனால், இந்த விலை உயர்வு காணப்படுகிறது. தினமும் குறைந்தது 150 மூடைகள் வரும் பீன்ஸ் தற்போது வெகுவாக குறைந்துள்ளது. இதனால், சந்தைக்கு வந்தவுடன் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர். தற்போது மழை ஓய்ந்து வெயில் அடிக்கடி சுட்டெரிக்க துவங்கியுள்ளதால் பீன்ஸ் விலை குறைய வாய்ப்புள்ளது என்றனர்.