பரேலி: லோக்சபாவில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய ஓவைசிக்கு, ஜனவரி 7-ம் தேதி ஆஜராகுமாறு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஐஎம்) தலைவர் ஓவைசி, ஐதராபாத் தொகுதி எம்பி. தேர்தலுக்குப் பிறகு ஜூன் 25-ம் தேதி மக்களவையில் எம்.பி.யாகப் பதவியேற்றார்.
அப்போது, பாலஸ்தீனத்தைப் புகழ்ந்து கோஷங்களை எழுப்பினார். இது தொடர்பாக, உ.பி., மாநிலம் பரேலியைச் சேர்ந்த வீரேந்திர குப்தா என்பவர் உள்ளூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த பரேலி மாவட்ட நீதிபதி சுதிர், மனுவை ஏற்று, ஜனவரி 7-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு ஒவைசிக்கு நோட்டீஸ் அனுப்பினார்.