சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள அரணையூர் கிராம மக்களுக்கு ஏற்கனவே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை வழங்கப்பட்டு வந்தது.
இதன் மூலம் குளங்களை சீரமைத்தல், உபரிநீர் கால்வாய்களை சீரமைத்தல், மரக்கன்றுகள் நடுதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வந்தனர். இப்பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த சில நாட்களாக இக்கிராம மக்களுக்கு 100 நாள் வேலை வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரிகளை சந்தித்து மீண்டும் பணி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அவர்களுடன் நூறு நாள் வேலை செய்யும் அதே ஊரைச் சேர்ந்த நாடக ஒருங்கிணைப்பாளர் சீமானின் தாயார் அன்னம்மாளும் வந்திருந்தார். மீண்டும் அரசு அனுமதி பெற்று 100 நாள் வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதையடுத்து அன்னம்மாள் நாதக கொடி ஏந்திய வாகனத்தில் ஏறி புறப்பட்டார்.