சென்னை: வெள்ளி 27, சனி 28, ஞாயிறு 29 ஆகிய தேதிகளில், சென்னை மற்றும் பிற இடங்களில் இருந்து தமிழகம் முழுவதும் உள்ள பிற இடங்களுக்கு அதிக அளவில் பயணிகள் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு, தினசரி பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் திட்டமிட்டுள்ளன.
சென்னை கேளம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூருக்கு வெள்ளிக்கிழமை 245 பேருந்துகளும், 28-ம் தேதி சனிக்கிழமை 240 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர் என மொத்தம் 81 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பெங்களூரு, மற்றும் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மாதவரத்தில் இருந்து மொத்தம் 20 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.