ஆந்திராவில் ஜெகன்மோகன் ஆட்சியில் முறைகேடாக பணியமர்த்தப்பட்டதாக கூறி 410 ஊழியர்களை மாநில அரசின் ஃபைபர்நெட் நிறுவனம் நிரந்தரமாக பணி நீக்கம் செய்துள்ளது. இதுகுறித்து, ஆந்திர மாநில ஃபயர்நெட் நிறுவனத்தின் (ஏபிஎப்சி) தலைவர் ஜி.வி. ரெட்டி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்த ஃபைபர்நெட் நிறுவனத்தில் முந்தைய ஜெகன் அரசு எந்த தகுதியும் இல்லாமல் 410 ஊழியர்களை சட்டவிரோதமாக நியமித்துள்ளது. ஜெகன் கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வீடுகளில் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு இங்கிருந்து மாதந்தோறும் பல லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. அவர்களில் 410 பேரையும் நிரந்தரமாக நீக்குகிறோம்.
அவர்களுக்கு முறையான நோட்டீஸ் கொடுத்த பிறகே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மாவுக்கு கூட இந்நிறுவனம் மூலம் முந்தைய அரசு 1.15 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. அதை 15 நாட்களுக்குள் திருப்பி செலுத்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. செலுத்தத் தவறினால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதைத்தான் ஜி.வி. ரெட்டி கூறினார்.