சென்னை: தமாகா தலைவர் ஜி.கே வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை:- பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 16 பேரை எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையினர் கைது செய்தது ஆக்கிரமிப்பு செயல். இலங்கை கடற்படையினர் இத்தகைய அராஜகத்தில் ஈடுபடுவதால் தமிழக மீனவர்களின் மீன்பிடி தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது.
இதனால் மீனவ குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக மீனவர்களின் பாதுகாப்பான மீன்பிடி தொழிலை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமான மீன்பிடி தொழிலை பாதுகாக்கவும், மீனவர்களின் நலனை பாதுகாக்கவும் மத்திய, மாநில அரசுகள் தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.