வாஷிங்டன்: தபோதைய அதிபர் ஜோபைடன் அமெரிக்க கோர்ட்டுகளில் பல்வேறு குற்ற வழக்குகள் தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 40 கைதிகளில் 37 பேருக்கு ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கு டொனால்டு டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். அவர் அடுத்த மாதம் (ஜனவரி) 20-ந்தேதி புதிய அதிபராக பதவி ஏற்க உள்ளார்.
இந்த நிலையில் தபோதைய அதிபர் ஜோபைடன் அமெரிக்க கோர்ட்டுகளில் பல்வேறு குற்ற வழக்குகள் தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 40 கைதிகளில் 37 பேருக்கு ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கு டொனால்டு டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் வலை தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: குற்றவாளிகள் செய்த கொலைகளை வன்மையாக கண்டிக்கிறேன். அவர்களால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் வேதனையை பகிர்ந்து கொள்கிறேன். ஜோபைடன் நமது நாட்டில் மிக மோசமான கொலையாளிகள் 37 பேரின் மரண தண்டனையை குறைத்து உள்ளார்.
ஒவ்வொருவரின் செயல்களை கேட்டால் அவர் ஏன் இதை செய்தார் என நீங்கள் கேள்வி எழுப்புவீர்கள். எந்த அர்த்தமும் இல்லை. உறவினர்கள், நண்பர்கள் கூட இதனை நம்பமாட்டார்கள். நான் பதவிக்கு வந்தவுடன் மீண்டும் மரண தண்டனையை கொடுக்க வலியுறுத்துவேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.