காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே கிளார் கிராமத்தில் அகஸ்தியர் கோவில் உள்ளது. இக்கோயிலில் சப்த ரிஷிகளில் ஒருவரான அகஸ்திய மாமுனிவர் அன்னை உலோப முத்திரையுடன் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அகஸ்திய மாமுனிவர் பிறந்த நட்சத்திரமான மார்கழி ஒயில்யம் நட்சத்திரத்தையொட்டி, இக்கோயிலில் கடந்த 24-ம் தேதி குருபூஜை விழா நடந்தது.
விழாவையொட்டி, அகஸ்தியப் பெருமாளுக்கும், தாயார் உலோப முத்திரை அம்மனுக்கும் 108 சங்காபிஷேகம் செய்யப்பட்டு, மலர் அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. இதில் கிளார் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.