புதுடெல்லி: ஆன்மிக சொற்பொழிவில் 121 பேர் உயிரிழந்த உ.பி.யின் ஹத்ராஸ் பகுதிக்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி செல்ல திட்டமிட்டுள்ளார்.
நேற்று (ஜூலை 02), உ.பி., மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள சிக்கந்த்ரா ராவ் பகுதியில் உள்ள புல்ராய் கிராமத்தில், ஆன்மிக தலைவர் போலே பாபாவின் சொற்பொழிவு திறந்தவெளியில் நடைபெற்றது.
கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் நிருபர்களிடம் கூறியதாவது: ஹத்ராஸ் சம்பவம் துரதிருஷ்டவசமானது.அங்கு செல்ல ராகுல் திட்டமிட்டுள்ளார்.அந்த நகரில், பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாட உள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.