சென்னை: வெளிநாட்டில் ப்ரீ புக்கிங்கில் வசூலை வாரிக்குவித்து வருகிறது நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
2025ம் ஆண்டு துவக்கமே தமிழ் சினிமாவிற்கு மாபெரும் வசூல் வேட்டை காத்திருக்கிறது. அஜித் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள விடாமுயற்சி படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவரவுள்ளது.
மகிழ் திருமேனி இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் என பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். நேற்று இப்படத்திலிருந்து சாவடிகா எனும் படம் வெளிவந்து Youtube-ல் பட்டையை கிளப்பி வருகிறது.
பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் விடாமுயற்சி படத்தின் ப்ரீ புக்கிங் வெளிநாட்டில் துவங்கியுள்ளது. இந்த நிலையில், ப்ரீ புக்கிங்கில் இதுவரை எவ்வளவு வசூல் வந்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, விடாமுயற்சி படம் ப்ரீ புக்கிங்கில் இதுவரை ரூ. 22 லட்சம் வசூல் செய்துள்ளது. இது அஜித்தின் படத்திற்கு வெளிநாட்டில் கிடைத்துள்ள சிறந்த ஓப்பனிங் ஆக பார்க்கப்படுகிறது. இதனால் கண்டிப்பாக முதல் நாள் வசூல் மாபெரும் அளவில் இருக்கும் என கூறுகின்றனர்.