சென்னை: திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்ட வெள்ளி விழாவை முன்னிட்டு இன்று முதல் 3 நாட்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆளில்லா விமானங்களுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளதால் 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தடையை மீறி பறக்கும் ஆளில்லா விமானங்கள் பறிமுதல் செய்யப்படும் என கன்னியாகுமரி டிஎஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையடுத்து குமரி திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா சென்னையில் பல்வேறு இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு வெள்ளி விழா கொண்டாடப்படுகிறது. திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா, கண்ணாடி பாலம் திறப்பு, திருக்குறள் கண்காட்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இன்று மாலை 5 மணிக்கும், நாளை காலை 9.30 மணிக்கும் நடைபெறும் நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.