சபரிமலைக்கு மகர விளக்கு கால பூஜைகளுக்காக இன்று மாலை 5:00 மணிக்கு சபரிமலை நடை திறக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் சாந்தி அருண்குமார் நம்பூதிரி தீபம் ஏற்றி, பக்தர்கள் வந்து தரிசனம் செய்வர். இரவு 11:00 மணிக்கு நடை மீண்டும் அடைக்கப்படும்.
மண்டல கால பூஜை முடிந்து, டிசம்பர் 26-ம் தேதி இரவு 10:00 மணிக்கு சபரிமலை நடை அடைக்கப்பட்டது. அதன் பின், மகர விளக்கு கால பூஜைகளுக்கான ஏற்பாடுகள் ஆரம்பமாகி, சன்னிதானம் சுற்றுப்புறங்கள் சுத்தம் செய்யப்பட்டது.
தேவையான பொருட்கள் டிராக்டர் மூலம் சன்னிதானம் கொண்டு வந்தன, மேலும் கூடுதல் பக்தர்களுக்கான அரவணைகளும் தயார் செய்யப்பட்டது.
நாளை அதிகாலை 3:00 மணிக்கு, தந்திரி கண்டரரு ராஜீவரரு ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்து, நெய்யபிஷேகம் தொடங்குவார். அதன் பிறகு கணபதி ஹோமம், உஷ பூஜை, களபாபிஷேகம், உச்ச பூஜை, தீபாராதனை மற்றும் இரவு அத்தாழ பூஜை ஆகியவை நடைபெறும். மகர ஜோதி பெருவிழா ஜனவரி 14-ல் கொண்டாடப்படும்.