சென்னை: கிரீன் பப்பாளியில் சுவையான சாலட் செய்து பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
பப்பாளியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று கிரீன் பப்பாளியில் சத்தான சுவையான சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்: பப்பாளி – 1/2, பூண்டு – 4, பச்சை மிளகாய் – 3, வெல்லம் – 6 மேஜைக்கரண்டி, எலுமிச்சை சாறு – 4, மேஜைக்கரண்டி, சோயா சாஸ் – 3 மேஜைக்கரண்டி, தக்காளி – 1, பீன்ஸ் – 3, வறுத்த கடலை – 2 மேஜைக்கரண்டி
செய்முறை: தக்காளி, பீன்ஸை பொடியாக நறுக்கி கொள்ளவும். பப்பாளியை தோல் நீக்கி துருவி தண்ணீரில் ஊற வைக்கவும். பூண்டு, மிளகாய் இரண்டையும் ஒன்றாக கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
அதில் வெல்லம், எலுமிச்சை சாறு, சோயா சாஸ் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும். அதில் வறுத்த கடலை சேர்த்து கெட்டியாக அரைத்து கொள்ளவும். அதில் தக்காளி மற்றும் பீன்ஸ் சேர்த்து கொள்ளவும். அதில் துருவிய பப்பாளியுடன் மற்ற பொருட்கள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
தயார் செய்து வைத்துள்ளதில் வறுத்து அரைத்த கடலையை சேர்த்து அலங்கரித்து பரிமாறவும். சூப்பரான சத்தான கிரீன் பப்பாளி சாலட் ரெடி.