கேரளா: சபரிமலையில் மகரவிளக்குப் பூஜைக்காக இன்று மீண்டும் நடை திறக்கப்பட்டதால் நீலிமலைப் பாதையில் வலம் வந்த காட்டுயானை வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்காக இன்று நடை திறக்கப்பட்டது. மண்டலபூஜை நிறைவடைந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
பம்பையில் இருந்து சபரிமலைக்கு செல்லும் நீலி மலைப்பாதையில் வலம் வந்த காட்டு யானை, சாலையின் ஒரு புறத்தில் இருந்து மறு புறத்திற்கு சாலையில் போடப்பட்டிருந்த தடுப்பு வேலிகளையும் தாண்டி சென்ற வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன