லவ் டுடே புகழ் பிரதீப் ரங்கநாதன் விக்னேஷ் சிவன் இயக்கும் எல்ஐசி படத்தில் நடித்து வருகிறார். லியோ தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு கோவையில் உள்ள ஈஷா மையத்தில் தொடங்கியது.
ஜாக்கி வாசுதேவ் முன்னிலையில் விக்னேஷ் சிவன் படப்பிடிப்பை தொடங்கினார். இப்படத்தில் கிருத்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.
முதலில் பிரதீப் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கிய விக்னேஷ் சிவன், பிறகு எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் காட்சிகளை படமாக்கினார். தற்போது தமிழகத்தில் படப்பிடிப்பை முடித்துள்ள விக்னேஷ் சிவன், அதன்பிறகு சில முக்கிய காட்சிகளை படமாக்க சிங்கப்பூர் சென்றார். இந்நிலையில் இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ரவிவர்மன் தற்போது படத்திலிருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கும் படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
மேலும் இப்படம் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் சமீப காலமாக OTT மற்றும் சாட்டிலைட் வியாபாரம் வெகுவாக குறைந்துள்ளதாலும், படத்தின் பட்ஜெட்டை வசூலிக்க முடியாமல் போனதாலும் கூறப்படுகிறது. அதனால் தான் விக்னேஷ் சிவன் குடும்பத்துடன் நாடு நாடாக சுற்றுகிறார்.