சென்னை: சமீபத்தில் நடந்த மதகஜராஜா ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் விஷாலின் உடல்நிலையை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்தனர். கையில் மைக்கை வைத்தும் பேச முடியாமல் விஷாலுக்கு கை நடுங்கியது. இப்படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்கு விஷால் கடும் காய்ச்சலுடன் வந்தது தெரியவந்தது.
இந்நிலையில் நடிகர் விஷாலின் உடல்நிலை குறித்து அவரது மேலாளர் விளக்கம் அளித்துள்ளார். விஷால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வதந்தி பரவி வருகிறது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். காய்ச்சலால் சற்றே வலி மற்றும் சோர்வாக உணர்கிறார். ஓரிரு நாட்களில் விஷால் முழுமையாக குணமடைந்து விடுவார்.