தேவையான பொருட்கள்:
எண்ணெய் – 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
வெந்தயம் – 5-6
வரமிளகாய் – 3
புளி – 1 சிறிய துண்டு
பீட்ரூட் – 2 மீடியம் சைஸ்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – சிறிது
செய்முறை:
முதலில் பீட்ரூட்டின் தோலை நீக்கிவிட்டு, அவற்றை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். பின் அதில் வரமிளகாய் மற்றும் புளியை சேர்த்து, நன்கு வறுத்து இறக்கி, அவற்றை ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதே வாணலியில் உள்ள எண்ணெயில் பீட்ரூட்டை சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து பீட்ரூட்டை வேக வைக்க வேண்டும்.
பீட்ரூட் நன்கு வெந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு அவற்றை குளிர வைக்க வேண்டும். பிறகு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின் அதில் குளிர வைத்துள்ள பீட்ரூட்டை சேர்த்து, நீர் ஊற்றாமல், சற்று கொரகொரவென்று அரைத்தால், சுவையான பீட்ரூட் சட்னி அல்லது பீட்ரூட் துவையல் தயார்.