சென்னை: ப்ரோமோ வீடியோ வெளியானது… அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘டிராகன்’ படத்தின் ‘வழித்துணையே’ பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
அடுத்ததாக, ‘ஓ மை கடவுளே’ திரைப்படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ‘டிராகன்’ படத்திலும் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் டிராகன் படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசை அமைக்கிறார்.
இப்படத்தில் கயடு லோஹர் , விஜே சித்து, ஹர்ஷத் மற்றும் பிரபல இயக்குநர்களான மிஷ்கின் , கவுதம் வாசுதேவ் மேனன், மரியம் ஜார்ஜ், சித்ரா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கி உள்ளதாக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில், இப்படத்தின் முதல் பாடலான ‘ரைஸ் ஆப் தி டிராகன்’ சமீபத்தில் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இத்திரைப்படத்தின் 2-வது பாடலான ‘வழித்துணையே’ என்ற பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. மேலும், படம் காதலர் தினத்தன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.