சென்னை: அதிவேக ரயில் சக்கர உற்பத்தி தொழிற்சாலை மார்ச் 2026-ல் தொடங்கப்படும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் புதுவயலில் உள்ள ரயில் சக்கர தொழிற்சாலையின் கட்டுமானப் பணிகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேரில் ஆய்வு செய்தார்.
சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ‘அமிரித் பாரத்’ ரயில் பெட்டிகளை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார். பின்னர், மத்திய அமைச்சர் ஒரு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர்; சென்னைக்கு வருவது எனக்கு மிகவும் பிடிக்கும். புதிய பாம்பன் ரயில் பாலத்தின் பணிகள் நிறைவடைந்துள்ளன.
புதிய பாம்பன் தொங்கு பாலத்தின் வடிவமைப்பு தனித்துவமானது. இந்திய ரயில்வேயில் 80,000 சக்கரங்கள் பயன்படுத்தப்படும், மீதமுள்ள சக்கரங்கள் உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். 2 லட்சத்திற்கும் அதிகமான உற்பத்தி திறன் கொண்ட அச்சு அமைப்பைப் பயன்படுத்தி இரும்பு தயாரிக்கப்படும். ரயில் சக்கரங்கள் துறைமுகங்களுக்கு அருகில் தயாரிக்கப்பட்டு மற்ற பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படும் என்று அவர் கூறினார்.