நியூயார்க்: கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரும் முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் அமோக வெற்றி பெற்றார். வரும் 20-ம் தேதி அவர் அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஆனால் அவர் பதவியேற்பதற்கு முன்பு, அவர் ஒரு பெரிய சட்ட சிக்கலை எதிர்கொண்டார்.
2016 அதிபர் தேர்தலுக்கு முன்பு, ஆபாச நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸுடனான தனது பாலியல் உறவை மறைக்க டிரம்ப் அமெரிக்க தேர்தல் பிரச்சார நிதியிலிருந்து சுமார் 1.3 மில்லியன் அமெரிக்க டாலர்களை நடிகைக்கு வழங்கியதாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் டிரம்ப் குற்றவாளி என்று 12 ஜூரிகள் கொண்ட குழு கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது.
நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில் டிரம்பின் தண்டனை விவரங்கள் நேற்று அறிவிக்கப்படவிருந்தன. டிரம்ப் சிறைக்குச் சென்றால் அமெரிக்க அதிபர் யார் என்ற கேள்வி எழுந்தது? இந்த நிலையில், டிரம்ப் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டிருந்தாலும், எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் அவர் விடுதலை செய்யப்படுவதாக மன்ஹாட்டன் நீதிமன்ற நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.