மத்திய அரசு மாநிலங்களுக்கு வரிப் பங்கு எனப்படும் மாதாந்திரத் தொகையை வெளியிட்டு வருகிறது. இந்தத் தொகை மாநிலங்களின் மூலதனச் செலவினங்களை விரைவுபடுத்தவும், அவற்றின் வளர்ச்சி மற்றும் நலத்திட்டச் செலவினங்களுக்கு நிதியளிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. கடந்த டிசம்பரில் ரூ.8,086 கோடி விடுவிக்கப்பட்டது, ஆனால் இந்த மாதம் இந்தத் தொகை ரூ.1.73 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் அறிவிப்பில், ஆந்திரப் பிரதேசத்திற்கு ரூ.7,002.52 கோடி, அருணாச்சலப் பிரதேசத்திற்கு ரூ.3,040.14 கோடி, அசாம் ரூ.5,412.38 கோடி, பீகார் ரூ.17,403.36 கோடி, சத்தீஸ்கர் ரூ.5,895.13 கோடி, கோவா ரூ.667.91 கோடி, குஜராத் ரூ.6,017.99 கோடி, ஹரியானா ரூ.1,891.22 கோடி, இமாச்சலப் பிரதேசம் ரூ.1,436.16 கோடி, ஜார்கண்ட் ரூ.5,722.10 கோடி மற்றும் கர்நாடகா ரூ. 6,310.40 கோடி என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இதேபோல், கேரளா ரூ. 3,330.83 கோடி, மத்தியப் பிரதேசம் ரூ. 13,582.86 கோடி, மகாராஷ்டிரா ரூ. 10,930.31 கோடி, மணிப்பூர் ரூ. 1,238.90 கோடி, மேகாலயா ரூ. 1,327.13 கோடி, மிசோரம் ரூ. 865.15 கோடி, நாகாலாந்து ரூ. 984.54 கோடி, ஒடிசா ரூ. 7,834.80 கோடி, பஞ்சாப் ரூ. 3,126.65 கோடி, ராஜஸ்தான் ரூ. 10,426.73 கோடி, சிக்கிம் ரூ. 671.35 கோடி, தமிழ்நாடு ரூ. 7,057.89 கோடி, தெலுங்கானா ரூ. 3,637.09 கோடி, திரிபுரா ரூ. 1,225.04 கோடி, உத்தரப் பிரதேசம் ரூ. 31,039.84 கோடி, உத்தரகாண்ட் ரூ. 1,934.47 கோடியும், மேற்கு வங்காளத்திற்கு ரூ.13,017.06 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், ராஜஸ்தான், பீகார், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு தமிழ்நாட்டை விட அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு குறைவான நிதியை வழங்கியுள்ளது என்ற விமர்சனம் எழுந்துள்ளது.