பாடலாசிரியர் பா. விஜய்யின் ‘அகத்தியா’ படத்தை இயக்கியவர். ஜீவா, அர்ஜுன், ராஷி கன்னா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த ஃபேண்டஸி த்ரில்லர் படம் வரும் 31-ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்காக ஒரு கேம் ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஃபேண்டஸி-சாகச விளையாட்டு அனைத்து வயதினரும் விளையாடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இந்தப் படத்திற்கான ‘என் இனிய பொன் நிலாவே’ என்ற பாடலும் இந்த நிகழ்வில் வெளியிடப்பட்டது. நடிகர் ஜீவா கூறுகையில், “ஒரு வீடியோ கேமில் என்னைப் பார்ப்பது ஒரு நம்பமுடியாத அனுபவம். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளது. இந்த முயற்சி ‘அகத்தியா’ படத்தை இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும்.”
தயாரிப்பாளர்கள் ஐசரி கணேஷ், பா. விஜய், நடிகை ராஷி கன்னா மற்றும் இந்த கேம் ஆப் வடிவத்தின் இணை தயாரிப்பாளர் அனிஷ் அர்ஜுன் தேவ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.