தஞ்சாவூர்: தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் Euro Kids (யூரோ குழந்தைகள்) மழலையர் தொடக்கப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு பள்ளி தாளாளர் வெற்றிவேல் தலைமை வகித்து நடத்தினார். இதில் வண்ணத்துப்பூச்சிகளாய் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். இதில் சின்னஞ்சிறு மழலையர்கள் பங்கேற்ற மானாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தெம்மாங்கு பாட்டு, கிராமிய நடனம்
உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன
நம் பாரம்பரியத்தை அச்சு பிசகாமல் மழலையர் செய்தது ஆசிரியர்கள், பெற்றோர்கள் மத்தயில் கரகோஷத்தை எழுப்பியது.