சாம்சங் நிறுவனம் அதன் புதிய கேலக்ஸி புக் 4 அல்ட்ரா அறிமுகப்படுத்தியதை அடுத்து அதன் உயர்நிலை டேப்லெட்களின் வரிசையை விரிவுப்படுத்தியுள்ளது. இந்த புதிய டிவைஸ் ஆனது, 3K ரெசொலூஷன் மற்றும் 120 ஹெர்ட்ஸ் அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் வழங்கும் 16-இன்ச் டைனமிக் AMOLED 2X டச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது மேக்புக் ப்ரோஸ், மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் லேப்டாப் சீரிஸ் மற்றும் சந்தையில் உள்ள பல டேப்லெட்களுடன் போட்டியிடுகிறது.
கேலக்ஸி புக் 4 அல்ட்ரா இரண்டு வகைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது 16 ஜிபி ரேம் மற்றும் ஆர்டிஎக்ஸ் 4050 கொண்ட கோர் அல்ட்ரா 7 மாடல் விலை ரூ.2,33,990 ஆக உள்ளது. மற்றும் 32 ஜிபி ரேம் மற்றும் ஆர்டிஎக்ஸ் 4070 கொண்ட ஹையர் கோர் அல்ட்ரா 9 மாடல் விலை ரூ.2,81,990 ஆக உள்ளது. கேலக்ஸி புக் 4 அல்ட்ராவின் இரண்டு வகைகளும் மூன்ஸ்டோன் கிரே வண்ணத்தில் கிடைக்கின்றன.
சாம்சங் கேலக்ஸி புக் 4 அல்ட்ரா ஆனது இன்டெல் கோர் அல்ட்ரா 9 அல்லது 7 ப்ராசசரால் மேம்பட்ட நியூரல் ப்ராசசிங் யூனிட்களுடன் (NPU) இயங்குகிறது மற்றும் அதன் முன்னோடியான Galaxy Book3 உடன் ஒப்பிடும்போது 2.3X AI ஆக்சிலரேஷன், 10 பெர்ஸன்ட் CPU பூஸ்ட் மற்றும் 13 பெர்ஸன்ட் GPU பூஸ்ட் வழங்கும் என்று கூறப்படுகிறது. கூடுதலாக, NVIDIA TensorRT மற்றும் DLSS டெக்னாலஜி ஆனது இமேஜ் மற்றும் வீடியோ தரத்தை மேம்படுத்துகிறது, மேலும், 300 RTX AI கேம்களை ஆதரிக்கிறது.
இது தவிர, டேப்லெட்டில் டால்பி அட்மாஸ் ஆதரவுடன் AKG குவாட் ஸ்பீக்கர்கள் மற்றும் பை-டைரக்ஷனல் நாய்ஸ் கேன்ஸிலேஷன் மைக்ரோஃபோன், வெப்பத்தை குறைக்கவும் மற்றும் இரைச்சலுக்காகவும் டூயல் ஃபேன் , 23 சதவீதம் லார்ஜர் வேபோர் சேம்பேர் (vapour chamber) மற்றும் மேம்படுத்தப்பட்ட தெர்மல் கேபாஸிட்டி ஆகியவை கொண்டுள்ளதாக போர்டல் தெரிவித்துள்ளது. பேட்டரியைப் பொறுத்தவரை, கேலக்ஸி புக் 4 அல்ட்ரா, USB-C டைப் வழியாக 140W அடாப்டருடன் 30 நிமிடங்களில் 0 முதல் 55 சதவீதம் வரை சார்ஜ் செய்யப்படுகிறது.
மேலும், HDMI 2.1 போர்ட்கள் மற்றும் ஃபாஸ்டஸ்ட் ஃபைல் ட்ரான்ஸ்பர்க்காக தண்டர்போல்ட் 4 போன்ற பல போர்ட்களை கொண்டுள்ளது. புதிய ஃபிளாக்ஷிப் கேலக்ஸி புக் டேப்லெட் ஆனது, AI-மேம்படுத்தப்பட்ட ஸ்டுடியோ எஃபெக்ட்களுடன் கூடிய விரிவான வீடியோக்களை எடிட் செய்ய யூசர்களுக்கு உதவுகிறது.