பிரபல தமிழ் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் தனது 39வது வயதில் நிக்கோலாய் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இதையடுத்து திரையுலகினர் பலர் நேரில் வந்து தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
திரையுலகினர் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள், குறிப்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலரும் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவி லதா ரஜினிகாந்துடன் இணைந்து திருமணமான தம்பதிகளுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தார். ஆனால் அப்போது மாப்பிள்ளை சச்தேவ், மேல் சட்டை அணியாமல் பணியனோடு போஸ் கொடுத்ததை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.